இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட பென்குயின்கள் - இந்தியாவில் பிறக்கும் முதல் பென்குயின்

வெளி நாடுகளிலும், டிஸ்கவரி சேனலிலும் பார்த்த பென்குயின் பறவைகளை, இந்தியாவில் நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட பென்குயின்கள் - இந்தியாவில் பிறக்கும் முதல் பென்குயின்
x
தென்கொரிய தலைநகர் சியோல் நகரில் இருந்து, 8 பென்குயின்கள், மகாராஷ்டிரா மாநிலம்,மும்பையில் உள்ள 'பைகுல்லா' உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.மூன்று மாத பராமரிப்பிற்குப் பின்னர், இவற்றைக் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பென்குயின்களைப் பார்த்து  குதூகலித்தவர்களில், பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்தியாவில் வேறு எந்த உயிரியல் பூங்காவிலும் பென்குயின் பறவைகள் வளர்க்கப்படவில்லை.அதன் வாழ்விடத்துக்கு ஏற்ற, 4 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட 250 சதுர அடி கொண்ட செயற்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்த பென்குயின்கள், உரிய பயிற்சியாளர்களைக் கொண்டு பராமரிக்கப்படுகிறது.2016ம் ஆண்டு, இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இது 'ஹம்போல்டுட்' வகை பென்குயின் எனக் கூறப்படுகிறது. விமானத்தில் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து குளிர்சாதன வசதி கொண்ட கன்டெய்னரில் வைத்து பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. இவை சியோலில் இருந்து 11.30 மணி நேர பயணத்துக்குப்பின் மும்பை பூங்காவுக்கு வந்து சேர்ந்தன. இதற்காக சுமார் 45 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 

குளிர்பிரதேசத்தில் மட்டுமே வாழும் பென் குயின் பறவைகளுக்கு ஏற்ப, மும்பையில் தட்ப வெட்ப நிலை இல்லை என்பதால், தனி வசிப்பிடம் உருவாக்கப்பட்டது. ஆனாலும், இந்த பென்குயின்களில் ஒன்று உயிரிழந்தது.இதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் மும்பையில் பென்குயின்களை வளர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் தான், சமீபத்தில் இங்குள்ள ஒரு பென்குயின் பறவை முட்டையிட்டது. பிலிப்பர் என்று பெயரிடப்பட்ட இந்த பென்குயின் பறவையின் முட்டையை, உயிரியல் பூங்கா மருத்துவர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த முட்டை குஞ்சு பொறித்தால், இந்தியாவில் பிறக்கும் முதல் பென்குயின் பறவை என்ற புகழை பெறும்.பெரும்பாலும், அந்த நாள் இந்திய சுதந்திர நாளான ஆகஸ்ட்-15ஆம் தேதியாக இருக்கலாம் என்று,மருத்துவர்கள் கணித்துள்ளனார்... 

Next Story

மேலும் செய்திகள்