தாடி வளர்ப்போர் சங்கம் ஆரம்பித்த இளைஞர்கள் - சமூக சேவையாற்றுவதில் ஆர்வம்
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 09:14 AM
தாடி வளர்ப்பதில் சாதனை புரிவது மட்டுமின்றி, சங்கத்தை ஆரம்பித்து, சமூக சேவையிலும் சாதித்து வருகின்றனர் இந்த இளைஞர்கள்.
 கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்,இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.அது தான், தாடி வளர்ப்போர் சங்கம்.இந்த சங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவை, அவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். உற்சாகமாகவே தொடங்கப்பட்ட இந்த சங்கத்தில், சுமார் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவருமே,21 வயதை ஒட்டியவர்கள்.

தாடி மீது, தீராத காதல் கொண்டுள்ள இந்த இளைஞர்கள், கொஞ்சமல்ல... நிறையவே தாடி வளர்த்துள்ளனர். தாடி வைத்திருப்பவர்கள் என்றாலே, சந்தேக கண்களோடு பார்க்கும் நிலையை மாற்ற வேண்டுமென இந்த ''தாடிவாலாக்கள்'' லட்சியம் கொண்டுள்ளனர்.''தாடி வைத்திருப்பவர்களும் நல்லவர்களே'' எனக் கூறி வரும் இவர்கள், வெறும் வார்த்தைகளால் நின்றுவிடவில்லை. தங்களது அமைப்பை, சமூக சேவையாற்ற பயன்படுத்தி வருகின்றனர்.முதியோர் இல்லம், சிறுவர் காப்பகத்திற்கு உதவி வரும் இவர்கள், முதலாமாண்டு விழாவை, ரத்த தான முகாமாக மாற்றிவிட்டனர்.''தாடி வளர்ப்போர் சங்கமா?'' என, இவர்களை அதிசயமாக பார்த்தவர்களை, ஆச்சரியப்பட வைத்து விட்டனர் இந்த தாடிக்கார இளைஞர்கள்... இவர்கள், பாசக்கார இளைஞர்கள்.

பிற செய்திகள்

தெலுங்கு தேச எம்.பி. ராமரைப் போல் வேடமணிந்து போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

224 views

ஜார்கண்ட்டில் 56 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் : நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 56 குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய குழந்தைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

166 views

3 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்கா நல்லூர் கிராமத்தில்,3 குழந்தைகளை நதியில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர மனம் படைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

2342 views

மாற்று திறனாளிகளால் இயக்கப்படும் "காஃபே" கடை : திறமைகளை வெளிக்கொணர புதிய முயற்சி

மும்பையில் முற்றிலும் மாற்றுத் திறனாளிகளை கொண்டு, காஃபே கடை என்ற சிறிய ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

87 views

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ பிரிவுக்கு எதிரான வழக்கு : ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

28 views

மாணவர்கள் தற்கொலையில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடம்...

நாடு முழுவதும் கடந்த 2015ஆம் ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 ஆயிரத்து 934 பேர் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.