தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் - உலக சுகாதார நிறுவனம்

தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் - உலக சுகாதார நிறுவனம்
x
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில், ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி 2014-இல் துவக்கி வைத்தார். அதன்படி இதுவரை 7.9 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, திறந்தவெளி கழிப்பிடங்களினால் ஆண்டுக்கு சுமார் 19 கோடியே 90 லட்சம் பேர் பேர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் உள்ள பகுதிகளில் வயிற்றுப்போக்கு நோய், 18.1 சதவீதமாக உள்ளதாகவும், திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட பகுதிகளில் அது 12.1 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திறந்தவெளி கழிப்பிடங்கள் உள்ள பகுதிகளில் 41.2 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளதாகவும், திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட பகுதிகளில் அது 28.3 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.    

Next Story

மேலும் செய்திகள்