தேர்வில் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்வில் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த ஆசிரியர்கள்
x
கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. அரசு பள்ளியில் நடந்த இந்த தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், புத்தகத்தை வைத்து தேர்வு எழுதினார்கள். 

இதுகுறித்து பள்ளியின் ஊழியர் ஒருவர்  பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக தேர்வு மையத்திற்கு சென்ற அதிகாரிகள் காப்பி அடித்துக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து புத்தகங்களை பறிமுதல் செய்தனர். எனினும் தேர்வில் காப்பி அடித்த ஆசிரியர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஒட்டுமொத்தமாக காப்பி அடிக்கப்பட்டதால் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடகா சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்