தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு
x
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறைதெரிவித்துள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், வாங்கிய கடன்களுக்கான வட்டி,மானியங்கள் ஆகியவை  தவிர்க்க இயலாத, கட்டாய செலவுகள் என்று தமிழக அரசு வகைப்படுத்தி உள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் இந்த செலவுகளை எதிர்கொள்ள மொத்தம் 94 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிகர செலவில் இது 61 புள்ளி 85 சதவீதமாகும். கடந்த 2015-16-ல் இது 59 புள்ளி 09 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2016-17-ல் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்துக்கு 39 ஆயிரத்து 246 கோடியும், ஓய்வூதியம் வழங்க 18 ஆயிரத்து 879 கோடியும், கடன்களுக்கான வட்டிக்கு 20 ஆயிரத்து 533 கோடியும்,மானியங்களுக்கு 16, ஆயிரத்து 92 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது.மானியங்களில் மிக முக்கியமானதாக உணவு மானியம் உள்ளது. பொது விநியோக திட்டத்திற்காக ஐந்தாயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 விவசாயத்திற்கு இலவச மின்சாரம், மானிய விலையில் பல தரப்பினருக்கும் மலிவான மின்சாரம் போன்றவைகளுக்காக நான்காயிரத்து 271 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விவசாய இடுபொருட்களுக்கான மானியமாக ஆயிரத்து 626 கோடியும், தொழில் துறைக்கான விற்பனை வரி மானியமாக ஆயிரத்து 600 கோடியும் நிதி ஒதுக்கபட்டுள்ளது.அரசின் நிகர வருமானத்தில் பெரும் பகுதி தவிர்க்க முடியாத கட்டாய செலவுகளுக்காக ஒதுக்கப்படுவது வருடந்தோறும் அதிகரித்து வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்