சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாடிய கைதி : கேக் வெட்டும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவேந்திர சிங் என்ற கைதி, தமது பிறந்த நாளை சிறைச்சாலைக்குள் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாடிய கைதி : கேக் வெட்டும் வீடியோ வெளியானதால் பரபரப்பு
x
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவேந்திர சிங் என்ற கைதி, தமது பிறந்த நாளை சிறைச்சாலைக்குள் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தற்போது அந்தக் கைதிக்கு, அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக, அவர் தெரிவித்தார். பிறந்த நாளை கொண்டாட ஜெயிலர் வினைய் குமார் ஏற்பாடு செய்ததாகவும், இதற்காக தம்மிடம் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்