சீனா இறக்குமதி - 2 லட்சம் பேர் வேலை இழப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை சூரிய சக்தி தகடுகளால், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மூடப்பட்டு, சுமார் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக நாடாளுமன்ற கமிட்டி, அறிக்கை அளித்துள்ளது.
சீனா இறக்குமதி - 2 லட்சம் பேர் வேலை இழப்பு
x
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு, கடந்த ஆண்டு 2 கோடியே 40 லட்சம் சைக்கிள்களும், 3 ஆயிரத்து 353 கோடி ரூபாய் மதிப்புள்ள 48 கோடியே 80 லட்சம் பொம்மைகளும், 13 ஆயிரத்து 57 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து மூலப்பொருட்களும், 16 ஆயிரத்து 493 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.இதேபோல், மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் சூரிய சக்தி தகடுகளின் போட்டிகளை சமாளிக்க முடியாமல் பல இந்திய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இது தொடர்பாக, வெளிநாட்டு வர்த்தகத்திற்கான நாடாளுமன்ற கமிட்டி கொடுத்த அறிக்கையில், 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியை பெரிதும் பாதிக்கும் என்பதால் தரம் மற்றும் உண்மையான விலையை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்