மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் : பாலிவுட் நடிகை கங்கனா விருப்பம்

பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவியில் அமர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் : பாலிவுட் நடிகை கங்கனா விருப்பம்
x
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கங்கனா, நரேந்திர மோடி தான் ஜனநாயகத்திற்கு ஏற்ற சரியான தலைவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நரேந்திர மோடி தனது கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர் என்றும், சிலரைப் போல, குடும்பப் பின்னணி மூலம் அவர் வளரவில்லை என்றும் கங்கனா தெரிவித்துள்ளார்.  ஒரு நாட்டில் நிலவும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர, ஐந்தாண்டுகள் போதாது என்பதால்,அடுத்த தேர்தலிலும், மோடி வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராகி நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கங்கனா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்