7 -ஆவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்

சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்,டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடந்து வரும் லாரிகள் வேலைநிறுத்தம் 7-வது நாளை எட்டியுள்ளது.
7 -ஆவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்
x
சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயும், தமிழகத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவிற்கு செல்லும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.லாரிகள் வேலைநிறத்தத்தால், கேரளாவிற்கு உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும், வாகனங்கள் அனைத்தும் கம்பம் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.

"லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்" - தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஓசூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் சண்முகப்பா, லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று கூறினார்.

"லாரி உரிமையாளர் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்" - வணிகர்கள் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன்


லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என்றால், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என, தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.

 



Next Story

மேலும் செய்திகள்