7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமித்த புகழ் பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரை

உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலின், வருடாந்திர தேரோட்டத்தைக் காண, லட்சக் கணக்கான, பக்தர்கள் குவிந்தனர்.
7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமித்த  புகழ் பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரை
x
* ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயில், வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.  இந்திர தையுமா என்ற மன்னரால், ஜெகன்நாதர் கோயில், கட்டப்பட்டது. 

* ஆனால், இது கால வெள்ளத்தில் பாழடைந்து விட்டது. அதன் பிறகும் கூட அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும், கடல் மூழ்கடித்து விட்டது. 

* பின்னர், கி.பி.12-ம் நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசரால், தற்போதுள்ள கோயில், கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.  

* இந்தக் கோயிலைக் கட்ட கங்கையில் இருந்து, கோதாவரி வரையான சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட குடிமக்களின் 12 ஆண்டுகால வரிப்பணத்தை செலவிட்டுள்ளனர். 

* இங்குள்ள ஒரு கோபுரம் 713 அடி உயரம் கொண்டது.  ஒடிசாவிலேயே இந்த கோபுரம் தான் மிகவும் உயரமானது. இது, மூலவர் ஜெகந்நாதரின் கருவறை விமானம்.

* இங்கு, ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்து, கருவறையிலிருந்து அருள் பாலிக்கின்றனர். இந்த உருவங்கள், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதியதாக உருவாக்கப்படுகின்றன. 

* இங்கு, பிரசித்திபெற்ற ஜெகன்நாதர் கோவிலின் ரத யாத்திரை கடந்த 14ம் தேதி தொடங்கியது.  ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. 

* 9வது நாள் திருவிழாவையொட்டி, 3 ரதங்களை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த ரத யாத்திரையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

* ஆண்டுதோறும் இந்த யாத்திரைக்காக, புதிய தேர்கள் உருவாக்கப்படுவது, இதன் தனிச்சிறப்பு... சராசரியாக, இந்த ரத யாத்திரையின் போது, வெளிநாட்டு பக்தர்கள் உட்பட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இங்கு சங்கமிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்