வதந்தி அடிப்படையில் அடித்துக் கொல்லப்படும் விவகாரம்: உள்துறை செயலர் தலைமையில் குழு அமைப்பு

நாட்டில் பசு பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு மூத்த அமைச்சர்கள் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது.
வதந்தி அடிப்படையில் அடித்துக் கொல்லப்படும் விவகாரம்: உள்துறை செயலர் தலைமையில் குழு அமைப்பு
x
நாட்டில் பசு பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு மூத்த அமைச்சர்கள் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது. 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த செயல்களை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சட்டம், ஒழுங்கு மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் வருவதால், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் படி இத்தகையை செயல்களை தடுக்கவும், இ​தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அந்த சுற்றறிக்கையில் மத்திய அரசு அறிவுறுத்தியதும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

உள்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், நீதித்துறை, சட்டமியேற்றும் துறை மற்றும் சமூகநீதித்துறை செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 4 வாரத்தில் மூத்த அமைச்சர்கள் குழுவிற்கு பரிந்துரையை சமர்ப்பிப்பார்கள் என்றும், அதனை உள்துறை, அமைச்சர் தலைமையிலான மூத்த அமைச்சர்கள் குழுவினர் பரிசீலித்து பிரதமருக்கு பரிந்துரை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் வெளியுறவு, நெடுஞ்சாலை, சட்டம்  மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்