ஜப்பானியர்களைக் கவர்ந்த புதுச்சேரி கோவில்

புதுச்சேரியில் உள்ள கோவிலுக்கு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். ஜப்பானியர்களை ஈர்த்த அந்தக் கோவில் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
ஜப்பானியர்களைக் கவர்ந்த புதுச்சேரி கோவில்
x
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் உள்ளது காளிமுத்து மாரியம்மன் கோவில்... 92 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்தக் கோவிலில், ஒவ்வொரு ஆடி மாதமும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், இங்கு வரும் ஜப்பானியர்கள் தான்.. 

அவர்கள், கடல் கடந்து இந்தக் கோவிலுக்கு வருவதற்கான காரணம் வியப்பை ஏற்படுத்துகிறது.. 

சாமிப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த குறிஞ்சி செல்வன் என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு உணவகம் ஒன்றை தொடங்கிய குறிஞ்சி செல்வனுக்கு வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. அதைக்கண்ட அவரது வாடிக்கையாளர்கள், வியாபார வெற்றிக்கான காரணத்தை கேட்டுள்ளனர். 

அதற்கு, புதுச்சேரியில் உள்ள காளிமுத்து மாரியம்மனின் அனுக்கிரகம் தான் தனது வெற்றிக்கு காரணம் என்றும், அந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் எதுவும் நடக்கும் என்றும்  குறிஞ்சிசெல்வன் பதில் அளித்துள்ளார். அதைக்கேட்ட ஜப்பானியர்கள் சிலர், காளிமுத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். 

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும், ஆடிமாத திருவிழாவிற்காக, குறிஞ்சி செல்வன் புதுச்சேரி வரும் போது, அவருடன் ஜப்பானியர்கள் சிலரும் கோவிலுக்கு வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்