பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி
பதிவு : ஜூலை 12, 2018, 09:29 PM
கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால், விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.  இந்தப் பள்ளி, பாதிரியார் பிரான்கோ முலக்கல் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் , குருவிலங்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் பாதிரியார் முலக்கல் கட்டாயப்படுத்தி பலமுறை தன்னை  பலாத்காரம் செய்ததாக ஆசிரியை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, பாதிரியார் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால், கேரளாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.