காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - கபினியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு

38,000 கன அடியில் இருந்து 45,000 கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - கபினியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு
x
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளான குடகு, ஹாசன், சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களில்  கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 38 ஆயிரம் கனஅடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு, இன்று 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு  ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில்  அது மேலும் அதிகரிக்கப்படக் கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஜூலை மாதத்திற்கு, தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்