செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு புதிய திட்டம்

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலைத் தடுக்க ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் தெரிவித்துள்ளார்.
செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு புதிய திட்டம்
x
ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலைத் தடுக்க  ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு  ஜவ்வாது மலை அடிவாரத்தில் மதுபான கடைகளில், மது வாங்கி கொடுத்து செம்மரம் வெட்ட அனுப்பி வைக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளதாக அவர் கூறினார்.  செம்மரம் வெட்டுவதற்காக வரும் மேஸ்திரிகள் , கூலி தொழிலாளர்களை கண்டறிந்து வனப்பகுதிக்கு  செல்வதற்கு முன்பே  பிடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களின் கைரேகை அடிப்படையில், அவர்களது வங்கி கணக்கையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாகவும் காந்தாராவ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்