"நேபாளத்தில் சிக்கி தவித்த 600 பேர் பத்திரமாக மீட்பு" - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்த 143 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் சிக்கி தவித்த 600 பேர் பத்திரமாக மீட்பு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
x
நேபாள நாட்டில் உள்ள கைலாஷ்,மானசரோவருக்கு ஆண்டுதோறும் ஏராளமானோர் யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் அங்கு கடும் மழை, குளிர்,  நிலச்சரிவு ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறாக மோசமான வானிலை நிலவியது.  விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் நேபாளம் சென்ற ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர். இந்நிலையில் சிம்மிகாட் பகுதியில் சிக்கிதவித்த 143 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 10 விமானங்களில் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  மொத்தம் 600 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  இதேபோல் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 16 பேர் நேற்று இரவு சென்னை திரும்பினர். 

Next Story

மேலும் செய்திகள்