தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது

சென்னை அருகே தொழிலதிபரை கடத்தி 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது
x
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கணேசன், கடந்த 2ஆம் தேதி வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில் சகோதரர் ராமசந்திரனை தொடர்பு கொண்ட கணேசன், 25 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, ரவுடி கும்பலிடம் இருந்து தம்மை மீட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக ராமசந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், தனிப்படை அமைத்து, கணேசனை காவல்துறையினர் தேடி வந்தனர். 
 

இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் கணேசன் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார், துப்பாக்கி முனையில்  தொழிலதிபரை மீட்டனர். இது தொடர்பாக சக்தி, சுமன், சிவக்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்