சேலத்தில் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

சேலத்தில் மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது.
சேலத்தில் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு
x
ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் நாராயணநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் முகமது ஆசாத் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். நேற்று முழுவதும் சிறுவனின் உடலை தேடும் பணி நடைபெற்று வந்தது. ஓடைக்கு வரும் நீரை மாற்றுப் பாதையில் திருப்பி விட்ட பின்னர் தேடும் பணி நடைபெற்றது. அப்போது கிச்சிபாளையம் கடுவாடு பாலம் பகுதியில் குப்பைகளுக்கு மத்தியில் இருந்து சிறுவன் முகமது ஆசாத்தின் சடலம் மீட்கப்பட்டது. 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் சடலம் குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு , மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.Next Story

மேலும் செய்திகள்