கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது

பேரவையில் 10 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர் வஜூபாய்வாலா
கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது
x
கர்நாடகாவில் கடந்த மே மாதம், சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசின் முதலாவது சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் வஜூபாய்வாலா. பத்து நிமிடங்கள் துவக்க உரையாற்றினார். அதில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசு செயல்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்,பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளது. குறிப்பாக, விவசாய கடன் தள்ளுபடி, காவிரி விவகாரம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்