காவிரி மேலாண்மை ஆணையம் : "செயல்பாட்டை பார்த்த பிறகு அனைத்து கட்சி கூட்டம்" - முதலமைச்சர் பழனிசாமி உறுதி

காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் பார்த்த பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் : செயல்பாட்டை பார்த்த பிறகு அனைத்து கட்சி கூட்டம் - முதலமைச்சர் பழனிசாமி உறுதி
x
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து பேசி தமிழக உறுப்பினருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக கூறினார். தமிழகத்திற்கு தேவையான நீரின் அளவு கிடைக்க இந்த முதல் கூட்டம் வழிவகை செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த கூட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பார்த்தபின் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி உறுதி அளித்தார்

Next Story

மேலும் செய்திகள்