பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விழா: "தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வரவேற்ற ஆசிரியர்கள்"

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் விழா எடுத்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது
பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விழா: தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வரவேற்ற ஆசிரியர்கள்
x
தாராபுரம் அடுத்த அலங்கியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இந்த ஆண்டு புதிதாக 55 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் விழா எடுத்தனர். அதனைதொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். தனியார் பள்ளிகள் மோகத்தில் இருந்து விடுபட்டு அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர்களின் முடிவுக்கு மரியாதை செய்தும், அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்கவிக்கும்  வகையிலும் இந்த விழா அமைந்ததாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்