மும்முனை மின்சாரத்தில் இயங்கும் புதிய ரயில் - கொடி அசைத்து துவக்கம்

சென்னை ஐசிஎஃப்பில், மும்முனை மின்சாரத்தில் இயங்கக் கூடிய புதிய வகை ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
மும்முனை மின்சாரத்தில் இயங்கும் புதிய ரயில் - கொடி அசைத்து துவக்கம்
x
சென்னை ஐசிஎஃப்பில், மும்முனை மின்சாரத்தில் இயங்கக் கூடிய புதிய வகை ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 

முழுக்க முழுக்க ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயிலை, ரயில்வே வாரிய முன்னாள் அதிகாரிகள், தாசரதி, விஜயா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எப் பொதுமேலாளர் மணி, ஐசிஎஃப்பில், அதிநவீன வசதிகளுடன், அதிவேகத்தில் செல்லக்கூடிய புதிய வகை இரயில் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறினார். 

சென்னை ஐ.சி.எப் பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள மும்முனை நேர்மின்சார ரயிலில் உள்ள வசதிகள் குறித்து தற்போது  பார்க்கலாம்..

நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் மின்தொடர் வண்டிகள் எதிர்சக்தியால் இயங்கும் மோட்டார்களில் இயங்குகின்றன 

தண்டவாளத்தின் மேல் உள்ள கம்பிகள் மூலம், 25 கிலோவாட் நேர்மின்சக்தி வழங்கப்படுவதால், மின்சார ரயில்கள் இயங்குகின்றன. 

அப்படி, நேர்மின்சக்தி வழங்கப்படும் போது, மின்மாற்றியில் அடிக்கடி ஏற்படும் மின் இழப்பை சரிசெய்யும் வகையில், இந்த புதிய வகை ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 2400 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில், ஒவ்வொரு பெட்டியிலும் 55 பேர் அமர்ந்து கொண்டும், சுமார் 170 பேர் நின்றுகொண்டும் பயணிக்கலாம்.

தற்போது இயங்கும் எதிர்மின்சக்தி கொண்ட மின்தொடர் வண்டியில்  ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்ல முடியாது ஆனால் இந்த மின் தொடரில் ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்ல வசதி உள்ளது. 

எதிர்சக்தியால் இயங்கும் மின்தொடர் வண்டியில் கழிப்பறை வசதி கிடையாது.   ஆனால் இந்த வண்டியில் கழிப்பறை வசதி உள்ளது.

மேலும் ஒவ்வொரு பெட்டிகளிலும்  சிசிடிவி கேமிரா , ஜி.பி.எஸ்.எல் மூலம் பயணிகள் அறிந்துகொள்ளும் அறிவிப்புகள் இடம்பெறுகின்றன.

ஐ.சி.எப் தயாரித்துள்ள இந்த இரயில் பீகார்   மாநிலத்திற்கு பயணிகள் சேவைக்காக  கொண்டு செல்லப்படுகிறது. 

மேலும் விரைவில் தெற்கு இரயில்வேயிலும் இது போன்ற நேர்மின்சக்தி கொண்ட மின் தொடர் வண்டி இயக்கப்படும் என்று ஐ.சி.எப்.  அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.



Next Story

மேலும் செய்திகள்