சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல - அருண் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல - அருண் ஜெட்லி
x
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கருப்பு பணம் கடந்த மூன்றாண்டுகளை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதில் மோடி அரசுக்கு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள்  குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்த நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்றும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப்பணத்தை டெபாசிட் செய்திருந்தால் கண்டறியப்படும் என்றும் தனது சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்