சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 % அதிகரிப்பு

2017 ஆம் ஆண்டு டெபாசிட் ரூ.7,000 கோடியாக உயர்வு
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 % அதிகரிப்பு
x
சுவிஸ் வங்கிகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தொகை 7 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு எடுத்த கறுப்புப் பண ஒழிப்பு அதிரடி நடவடிக்கையை அடுத்து, 2016 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 500 கோடியாக குறைந்த டெபாசிட், அடுத்தாண்டே 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 

2017 -ல் உலகம் முழுவதும் இருந்து சுமார் 100 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகள் கணக்கு விவரங்களை வெளியிட தொடங்கியதில் இருந்து 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக, இந்தியர்கள் டெபாசிட் செய்யும் தொகை 45 சதவீதம் அளவுக்கு குறைந்த நிலையில், மீண்டும் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  


2006 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருந்த தொகை 23 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், 

இது அடுத்த பத்து ஆண்டுகளில் பத்தில் ஒரு பங்காக குறைந்ததாகவும் சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு 12 சதவீதமாகவும், 2013-ல் 43 சதவீதமாகவும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்த தொகையின் அளவு இருந்துள்ளது. 

2004 ஆம் ஆண்டு அதிகப்பட்சமாக இந்தியர்கள் முதலீடு 54 சதவீதமாக இருந்துள்ளதாகவும், கறுப்புப்பண ஒழிப்பு தொடர்பான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்