குரல் மாதிரி சோதனை என்றால் என்ன?

பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி சோதனை எடுக்கப்பட்ட நிலையில் அந்த சோதனை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்...
குரல் மாதிரி சோதனை என்றால் என்ன?
x
குரல் மாதிரி சோதனை என்றால் என்ன? 



ஒரு குற்ற செயல் தொடர்பான வழக்கில் முக்கிய ஆதாரமாக ஒலி  இருக்கும் பட்சத்தில் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை ஆகும். அதன் அடிப்படையில் தான் குரல் மாதிரி சோதனை நடத்தப்படும். இந்த குரல் மாதிரி சோதனை என்பது முழுக்கவே இயற்பியல் துறை சார்ந்த ஒன்று. ஒலியானது அலை வடிவில் பயணிக்க கூடியது என்பதால் அது டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்படும் என்கிறார்கள். உச்சரிக்கும் வார்த்தைகளை டிஜிட்டல் மீட்டர் கொண்டு அலைவரிசையை அளவீடு செய்து அதன் அடிப்படையில் தான் முடிவுகளை கணிப்பார்கள்... 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 5 விதங்களில் குரல் மாதிரி சோதனை நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான ஆடியோவில் உள்ள பதிவுகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்து வெவ்வேறு சூழலில் அதனை  பேச வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வட்டார வழக்குகளில் பேசுமாறும் தொடர்பே இல்லாத அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களையும் பெற்றும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அவர் பல கட்டங்களில் பேசிய வார்த்தைகள் மூலம் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் ஆகியவை அலைவரிசை முறையில் சோதனை செய்யப்படும். இதை எல்லாம் ஒன்றாக சேர்த்து சராசரியான புள்ளிகளை கணக்கில் வைத்து முடிவுகள் எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்