குதிரையின் கழுத்தை அறுத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னையில் முன்விரோதம் காரணமாக குதிரையின் கழுத்தை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்
குதிரையின் கழுத்தை அறுத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு


சென்னையில் முன்விரோதம் காரணமாக குதிரையின் கழுத்தை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் குதிரைகளை வைத்து மாப்பிள்ளை அழைப்பு போன்ற நிகழ்வுகளை நடத்தும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேஷ் அவரை சிறைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராஜேஷை தாக்க வந்த கோகுல், அவர் இல்லாததால் அங்கிருந்த குதிரையின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குதிரைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story