மனைவியை, அண்ணனுக்கு விற்ற கணவன்

ஆந்திராவில், பணத்திற்காக பெற்ற பிள்ளைகளையும், மனைவியையும் விற்ற கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை, அண்ணனுக்கு விற்ற கணவன்
x
ஆந்திர மாநிலம் கொவளகுண்டாவைச்  சேர்ந்தவர் மத்திலெட்டி.... இவருக்கு நான்கு பெண் குழந்தைகளும்  ஒரு ஆண் குழந்தையும்  உள்ளனர். மத்திலெட்டி, மதுபோதைக்கு அடிமையாகி பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். கடன் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு பிறந்த குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு இவர் விற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 லட்ச ரூபாய் கடனுக்காக  தனது  மனைவி மற்றும் குழந்தைகளை 5 லட்ச ரூபாய்க்கு தனது அண்ணனிடம் விற்று ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மனைவி வெங்கடம்மாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் . இதனால்  மனம் வெறுத்துப் போன வெங்கடம்மா, குழந்தைகளுடன்  தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார் . பின்னர் அவர்  குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அதிகாரிகளிடம்  தனது கணவர் குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மத்திலெட்டியை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்