ஸ்மார்ட் சிட்டி திட்டம் : காலியாகும் காந்தி மார்க்கெட் - இடமாற்றம் செய்ய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்திற்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் : காலியாகும் காந்தி மார்க்கெட் - இடமாற்றம் செய்ய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
x
நூற்றாண்டு பழமை வாய்ந்த திருச்சி காந்தி மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் வருகிற 30ஆம் தேதி மாற்றப்பட உள்ளது. தரைத்தளம், முதல் தளம் என 2 தளங்களில் மொத்தம் ஆயிரம் கடைகள் கட்டப்பட்டுள்ளன. முதற்கட்டமாக தரைதளத்தில் மட்டும் 300 கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், 3 ஆயிரம் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகம் போதாது என்றும், சில்லறை வியாபாரிகளையாவது காந்தி மார்க்கெட்டில் இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்