உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு

கங்கை நதியின் நீர் மட்டம் கணிசமாக சரிந்தது
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு
x
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில்  தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தங்கள் அன்றாட தேவைக்கு கூட தண்ணீரின்றி தவித்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.  ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் கங்கை நதியின் நீர் மட்டம் தற்போது கணிசமாக சரிந்துள்ளது. கங்கை நதியில் இருந்து வாரணாசி நகருக்கான தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுவரும் நிலையில், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் வற்றியதால் சாகுபடி செய்ய தண்ணீரின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்