ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் - அப்பல்லோ டாக்டர் நளினி வாக்குமூலம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர் ஆன அப்பல்லோ டாக்டர் நளினி, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் - அப்பல்லோ டாக்டர் நளினி வாக்குமூலம்
x
ஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5 ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனையில் தாம் "டூட்டி"யில் இருந்ததாக கூறிய அவர், நேரில் பார்த்த விவரங்களை பதிவு செய்தார். இதன்படி, ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர, மற்ற பிரதான உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குப்பின் மூளையும் செயல் இழந்து விட்டது என டாக்டர் நளினி தெரிவித்தார். 

ஜெயலலிதாவுக்கு "எக்மோ" கருவி பொருத்தப்பட்ட குறிப்பிட்ட நாளில் புதிய மருந்துகள் கொடுக்கப்படவில்லை என கூறிய அவர், அப்படி கொடுத்திருந்தாலும் பலன் இருந்திருக்காது என்றார். மருத்துவமனையில் தனக்கு தெரிந்து, ஜெயலலிதாவை சசிகலா ஒரு முறை கூட பார்க்கவில்லை என்று தனது வாக்குமூலத்தில் டாக்டர் நளினி தெரிவித்துள்ளார். இதுதவிர, அப்பல்லோ நர்சு பிரேமா ஆண்டனியும், தனக்கு தெரிந்த தகவல்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் பதிவு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்