தமிழகத்தில் முதன்முறையாக பள்ளியில் பயோ டாய்லெட் வசதி

கோவை மாவட்டம் கலிக்க நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் பயோ டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக பள்ளியில் பயோ டாய்லெட் வசதி
x
தமிழகத்தில் முதன்முறையாக பள்ளியில் பயோ டாய்லெட் வசதிகலிக்கநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பயன்பாட்டிற்காக ரயில்களில் பயன்படுத்தப்படும் பயோ டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதன்முறையாக இந்த 
பயோ டாய்லெட் வசதி  கொண்டு வரப்பட்டுள்ளது.  வழக்கமான கழிப்பறைகள் போல இல்லாமல் பயோ டாய்லெட்டில்  நுண்ணுயிரிகள் கொண்ட திரவம் கொண்டு  கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால் நோய் கிருமிகள் பரவுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கழிப்பறைகளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மாணவ மாணவிகள் முன் வைத்துள்ளனர்.  Next Story

மேலும் செய்திகள்