நீதிபதி சத்தியநாராயணன் - சிறு குறிப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3வது நீதிபதியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ள சத்யநாராயணன் பற்றி தெரிந்து கொள்ளலாம்...
நீதிபதி சத்தியநாராயணன் - சிறு குறிப்பு
x
நீதிபதி சத்தியநாராயணன் - சிறு குறிப்பு



* சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டில் கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயணன் பொறுப்பேற்றார்.

* பின்னர் 2009-ல் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

* கும்பகோணம் தீ விபத்து தொடர்பான வழக்கில், குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தவர், நீதிபதி சத்தியநாராயணன் தான்.

* இவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து வழக்கை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டவர்.

* 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு போல, கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழக்கில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். அந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் சத்தியநாராயணன் தான்.

* இதேபோல, சமீபத்தில் சென்னை நீலாங்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் என சத்திய நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.



Next Story

மேலும் செய்திகள்