மூலநாதர் கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த ஆளுநர், முதலமைச்சர்

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மூலநாதர் கோயில் தேரோட்டத்தில் ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
மூலநாதர் கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த ஆளுநர், முதலமைச்சர்
x
மூலநாதர் கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த ஆளுநர், முதலமைச்சர்புதுச்சேரியை அடுத்த பாகூரில் உள்ள வேதாம்பிகை மூலநாதர் கோயிலின் பிரமோற்சவ விழா, கடந்த 17ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தையொட்டி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்