கோவை குடிநீருக்கு தனியாருடன் ஒப்பந்தம் - மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக, ஃபிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டாலும், நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் மாநகராட்சியிடமே இருக்கும் என, கோவை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை குடிநீருக்கு தனியாருடன் ஒப்பந்தம் - மாநகராட்சி ஆணையர் விளக்கம்
x
கோவை குடிநீருக்கு தனியாருடன் ஒப்பந்தம் - மாநகராட்சி ஆணையர் விளக்கம் 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் 'சூயஸ்' நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி சுமார் 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தினால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என புகார் எழுந்துள்ளது. மேலும், இத்திட்டத்தை அரசே செயல்படுத்தாமல், தனியாருக்கு விட்டது ஏன்? எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.  இதனிடையே, ஃபிரான்ஸ் நிறுவனத்துடன் குடிநீர் ஒப்பந்தம் போடப்பட்டாலும், நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் மாநகராட்சியிடமே இருக்கும் என, கோவை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்