ஆம்பூரில் பிரபலமாகி வரும் 'உணவு வங்கி' - ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் இளைஞர்கள்

ஆம்பூரில் உணவு வங்கி தொடங்கி ஆதரவற்றோர்களை தேடிச் சென்று உணவு அளித்து வரும் இளைஞர்களுக்கு பாராட்டு குவித்து வருகின்றது.
ஆம்பூரில் பிரபலமாகி வரும் உணவு வங்கி - ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் இளைஞர்கள்
x
'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தை அழிப்போம்' என்றார் பாரதியார். ஆனால், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களில், ஒரு வேளை பசியைக் கூட போக்க உணவின்றி மக்கள் வாடும் நிலை உள்ளது. அவர்களுக்கு உதவிகரம் நீட்டி வருகிறது ஆம்பூர் உணவு வங்கி அமைப்பு. தினமும், 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களை தேடிச் சென்று இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். 

முதலில் சிரமமாக இருந்தாலும், நாளடைவில் நன்கொடையாளர்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் இலவச உணவு வழங்க முடிகிறது என்கிறார் அந்த அமைப்பின் நிர்வாகி..

ஒருவருக்கு உதவி செய்ய யோசிக்கும் இந்த காலத்தில், நிதி திரட்டி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் ஆம்பூர் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். 




Next Story

மேலும் செய்திகள்