நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காவலாளி - அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்

வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவம் பார்க்கும் அவலம் நோயாளிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காவலாளி - அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்
x
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவர்கள் முறையாக பணிக்கு வராத காரணத்தினால் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவருக்கு மருத்துவமனை காவலாளி சிகிச்சை அளிக்கும் காட்சி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 60 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் இருந்தும், நோயாளிகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ள மக்கள், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்