காவிரி ஆணைய கூட்டம், டெல்லியில் ஜூலை 2 - ல் முதல் கூட்டம்? இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம், புதுடெல்லியில், வருகிற ஜூலை 2 ம் தேதி கூடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி ஆணைய கூட்டம், டெல்லியில் ஜூலை 2 - ல் முதல் கூட்டம்? இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
x
ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில், 4 மாநில பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். எனவே, 4 மாநில அரசுகளுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்படும் என்று மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி ஆணைய கூட்டம் எப்போது நடக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட விவகாரம்: "அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு செய்யப்படும்" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தகவல். 

காவிரி ஆணையத்திற்கு, கர்நாடக பிரதிநிதிகளின் பெயர்களை, அந்த மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், சட்ட வல்லுநர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவகுமார், காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினராக முதன்மைச் செயலர் ராகேஷ் சிங்கின் பெயரும் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக எல்.கே. பிரசன்னாவின் பெயரும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.. மேலும் கர்நாடகாவின் ஒப்புதல் இல்லாமல் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர்,  இது தொடர்பான அடுத்தகட்ட முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்