8 வழிச்சாலை - கேள்விகளும் விளக்கமும்

சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் குறித்து மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் பல கேள்விகளுக்கு விளக்கம் பெறப்பட்டுள்ளன.
8 வழிச்சாலை - கேள்விகளும் விளக்கமும்
x
சாலையால், மலைகள் பாதிக்கப்படுமா என்ற அச்சத்தை போக்கும் வகையில் விளக்கம் பெறப்பட்டுள்ளது. இந்த சாலையானது கஞ்சமலை மற்றும் கல்வராயன்மலைகளில் இருந்து1 புள்ளி 6 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது. அதே போல, கவுதிமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், வெடியப்பன்மலையில் இருந்து 200 மீட்டர் தொலைவிலும் அமைக்கப்பட உள்ளது. ஜருகு மலை மட்டுமே சுரங்கப்பாதைக்காக பயன்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் ஆதாரங்களை பொறுத்தவரை, 5 ஆயிரத்திற்கும் அதிகமான நீர்நிலைகள் தூர் எடுக்கபடவுள்ளதால் , நீர் ஆதாரங்கள் அதிகரிக்குமே தவிர குறையாது என விளக்கம் தரப்பட்டுள்ளது.


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது உள்ள போக்குவரத்து நெரிசலையும், வரும்காலங்களில் ஏற்பட இருக்கும் நெரிசல்களையும் கணக்கில் கொண்டே இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சமலை, கவுதி மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சுரங்க பாதைகள் அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அந்த மலைளில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சாலை திட்டத்திற்காக, 5 ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. இதில் ஆயிரம் ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. இதர 4 ஆயிரம் ஏக்கர் மட்டுமே தனியார் அல்லது மக்கள் வசம் இருந்து பெறப்படுகிறது.கையகப்படுத்தப்படும் நிலங்களில், 15 சதவீதம், அதாவது ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள்... இது சேலம்,காஞ்சிபுரம், கிருஷ்ண‌கிரி, தர்ம‌புரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் மொத்த பாசன நிலத்தில் 1 சதவீத‌த்திற்கும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சாலையால், வனவிலங்குகளுக்கு, பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9.95 கிலோமீட்டர் காடு வழியாக செல்லக்கூடிய சாலையில், 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 புள்ளி 7 கிலோ மீட்டர் சாலைகள் விரிவாக்கம் மட்டுமே செய்யப்பட உள்ளன. மற்ற பகுதி சாலைகள், பெரும்பாலும், காட்டு ஓரங்களில் தான் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்