பசுமை வழி சாலை திட்டம் - இழப்பீடு விவரம்

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் விவரம்
பசுமை வழி சாலை திட்டம் - இழப்பீடு விவரம்
x
சென்னை - சேலம் இடையே சுமார் 10 ஆயிரம் கோடி செலவில் பசுமை வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

இதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் சந்தை மதிப்பை விட 2 முதல் 4 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகினி அறிவித்துள்ளார். 

ஒரு ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் 21 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்  முதல் அதிகபட்சமாக, 9 கோடியே 4 லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 500 சதுர அடி காங்கிரீட் வீட்டுக்கு 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. மாட்டு கொட்டகைக்கு 25 ஆயிரம் ரூபாயும், தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், மாமரத்திற்கு 30, ஆயிரம்  ரூபாயும், கொய்யா மரத்திற்கு 4 ஆயிரத்து 200 ரூபாயும், நெல்லிக்காய் மரத்திற்கு  4 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படுகிறது. 

இதேபோல் பலா மரத்திற்கு 9 ஆயிரத்து 600 ரூபாயும், புளிய மரத்திற்கு 9 ஆயிரத்து 375 ரூபாயும், பனை மரத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அளிக்கப்படவுள்ளது.  திருவண்ணமாலை மாவட்டத்தில் சந்தை மதிப்பைவிட 1 புள்ளி 27 மடங்கு அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது. 
பம்பு செட் கிணறுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், கிணறுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், தென்னை மரத்திற்கு 80 ஆயிரம் ரூபாயும், பனை மரத்திற்கு 2 ஆயிரம் ரூபாயும், வாழை மரத்திற்கு ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்