சென்னை-சேலம் 8 வழிச்சாலை : எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?

சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ள நிலையில்,எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?
சென்னை-சேலம் 8 வழிச்சாலை : எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?
x
277கிலோ மீட்டர் தூரம் சென்னை- சேலம் பசுமை வழித்தடம் அமைக்க  10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நிலம் தொடர்பான பணிகளுக்கு  ஆயிரத்து 362 கோடி செலவிடப்படவுள்ளது

அடித்தளம் அமைப்பதற்கு ஆயிரத்து 99 கோடி ரூபாயும், நடைபாதை  பணிகளுக்கு ஆயிரத்து 463 கோடி ரூபாயும் செலவிடப்படவுள்ளது.

சிறிய பாலங்கள் அமைப்பதற்கு 698 கோடி ரூபாயும், மேம்பாலங்கள் அமைப்பதற்கு 146 கோடி ரூபாயும் செலவு செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புச்சுவர் பணிகளுக்கு2 ஆயிரத்து 66 கோடி ரூபாயும், 
கழிவுநீர் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு 281 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் போக்குவரத்து சாலை குறியீடுகள் அமைப்பதற்கு 143 கோடி ரூபாயும், சுங்கசாவடி அமைப்பதற்கு 698 கோடி ரூபாயும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு 375 கோடி ரூபாயும் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 





Next Story

மேலும் செய்திகள்