வாகன வசதியுடன் இயங்கும் அரசுப் பள்ளி

கிருஷ்ணகிரி அருகே இயங்கிவரும் அரசு பள்ளிக்கு, பொதுமக்கள் இணைந்து, வேன் வசதி செய்து கொடுத்துள்ளனர்
வாகன வசதியுடன் இயங்கும் அரசுப் பள்ளி
x
கிருஷ்ணகிரியை அடுத்த கும்மனூரில் இயங்கிவரும் 
அரசு உயர்நிலை பள்ளிக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், பல கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் நடந்தே வரவண்டிய நிலை இருந்தது.

இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 
வேறு பள்ளிகளில் சேர்க்க துவங்கியதால் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கும்மனூர் கிராமமக்கள் சேர்ந்து நிதி திரட்டி, பள்ளிக்கு வேன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
இதனால் மாணவர்கள் எண்ணிக்கை 60 இல் இருந்து 170 ஆக அதிகரித்துள்ளது.

போக்குவரத்து வசதியுடன் இயங்கும் அரசு பள்ளி இதுவாகவே இருக்கும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். வாகன வசதியால் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் அந்தந்த பகுதி மக்களே 
அரசு பள்ளிகளுக்கு தேவையானவற்றை செய்யலாம் என்பதற்கு கும்மனூர் கிராமம் முன்மாதிரியாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல... 




Next Story

மேலும் செய்திகள்