கல் செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் பணி - பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இளைஞர்

கல்செக்கில் மாடுகளை பூட்டி இயற்கையான முறையில் எண்ணெய் தயாரிக்கும் பணியில் நெல்லையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். அவரைப்பற்றிய செய்தித் தொகுப்பு
கல் செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் பணி - பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இளைஞர்
x
நெல்லை மாவட்டம் பேட்டை செக்கடியை பூர்வீகமாக கொண்டவர் சீனிவாசன். இவரது மகன் சிவ சிதம்பரம் பொறியியல் பட்டதாரி. கல்செக்கில் எண்ணெய் தயாரிப்பதில் இவர்களது குடும்பத்தில் இருப்போர் ஆர்வமாக இருந்துள்ளனர். 

கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக நெல்லை செக்கடி பகுதியில் மட்டும் சுமார் 70 பேர் கல் செக்குகள் வைத்து எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளனர். ஆனால் காலமாற்றத்தால் கல் செக்குகளின் புழக்கம் மறைந்து போனது. 

இந்த நிலையில் தான் தன் பரம்பரைக்கு பழகிய தொழிலான கல் செக்கு தொழிலை கையில் எடுத்தார் சிவ சிதம்பரம். நெல்லை வண்ணாரப்பேட்டை புறவழி சாலையில் கல் செக்கு எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தி துவக்கிய சிவ சிதம்பரம், பல்வேறு எண்ணெய் வகைகளை உற்பத்தி செய்து வருகிறார்.

 
கல் செக்கு மூலம் ஆட்டப்படும் எண்ணெய்களை அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும் அவர் பெருமையாகவே கூறுகிறார். 

கல் செக்கில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகை சுவை மாறாமல் மருத்துவ குணம் நிரம்பியதாக இருக்கிறது. இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும்  சொல்கிறார் சிவசிதம்பரம்.

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக பட்டதாரி இளைஞர் ஒருவர் இதில் ஈடுபட்டிருப்பதற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்