அழிவின் விளிம்பில் கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள்

அழிவின் விளிம்பில் உள்ள அரிய சேவல்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
அழிவின் விளிம்பில் கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள்
x
கூரிய பார்வை, துல்லிய தாக்குதல்... இதற்கேற்றாற் போல், தமது கால்களை லாவகமாக மாற்றி வைக்கும் திறன்.. இவை, சேவல்களுக்கு கைவந்த கலையாகும்.

சேவல் சண்டையின் போது, எதிரியைக் குறிவைக்கும் பாங்கு அலாதியானது. அப்போது, அதன் கால் அசைவுகளையும், நோக்கும் வியூகத்தையும் பார்த்து, அதிலிருந்து பல அசைவுகளை கற்று, அந்தக் காலத்தில், போர் பயிற்சி அளித்துள்ளனர். சிலம்பாட்ட வீரர்களிடம், சண்டை கோழியின் வியூகங்கள் தற்போதும் இருப்பதாக,  வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

 
இத்தகைய சிறப்புமிக்க, தமிழகத்திற்கே உரிய பாரம்பரிய சேவல் வகையான, கிளிமூக்கு விசிறிவால் கோழிகள், தற்போது அழியும் நிலையில் உள்ளன.

தமிழகத்தில், சுமார் 2 ஆயிரம் கோழிகள் மட்டுமே இருப்பதால், வீரத்தை போதித்த இவை, தற்போது வெறும் காட்சிப் பொருளாக மாறிவிட்டன. 30 ஆயிரத்தில் இருந்து, 3 லட்சம் ரூபாய் வரை விலை போகும் இந்த சேவல்கள், அதிகபட்சமாக மூன்றடி உயரமும், 10 கிலோ எடையும் கொண்டதாகும்... 

கிளி போன்ற குறுகிய அலகும், மயில் போன்ற நீண்ட வாலும் தான் இதன் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. கம்பு, மக்காச்சோளம், நிலக்கடலை ஆகியன பிரதான உணவாக வழங்கப்படும் நிலையில், வாரமொரு முறை மருத்துவ பரிசோதனையும் உண்டு.

வீடுகளில் குழந்தைகளுக்கு கொடுப்பது போல,
மழை, குளிர் காலத்தில் சுடுதண்ணீர் உபசாரமும் உண்டு. ஏனென்றால், சளி, காய்ச்சல் தான் இந்த வகை கோழிகளுக்கு பயங்கர விரோதியாகும். 

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள சேவற்சண்டையை மீண்டும் நடத்த வேண்டும் என்பதே கிளிமூக்கு கோழிகள் வளர்ப்போரின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

கிராமப்புற பொருளாதாரத்தை வலுவாக்க கூடிய இந்த வகை கோழிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாகும்... 



Next Story

மேலும் செய்திகள்