சென்னையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கல்லூரி மாணவர்கள்

சென்னையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கல்லூரிகளுக்கு செல்ல முயன்ற மாணவர்களை விசாரணை நடத்திய போலீசார், 8 பேரை சிறையில் அடைத்தனர்
சென்னையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கல்லூரி மாணவர்கள்
x
சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர், அண்ணா சதுக்கம் முதல் நந்தனம் வரை செல்லும் பேருந்தில் நேற்று, கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடியபடி சென்றதாக தெரிகிறது. இதேபோல, அமைந்தகரை, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள், பஸ் டே கொண்டாட முற்பட்டனர். 
இதையடுத்து 3 இடங்களிலும் சுமார் 100 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 31 மாணவர்களை எச்சரித்த போலீசார், அவர்களை கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தனர்.  ஆயுதங்கள் வைத்திருந்ததாக 8 மாணவர்கள் மீது பூக்கடை, அமைந்தகரை, அண்ணாநகர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்