மின் திருட்டை தடுக்க நடவடிக்கை - தமிழக அரசு

கடந்த நிதி ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்து 586 மின் திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 18 கோடியே 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் திருட்டை தடுக்க நடவடிக்கை - தமிழக அரசு
x
மின் திருட்டை தடுப்பதற்காக, முன்னாள் ராணுவ வீரர்கள் கொண்ட 43 கண்காணிப்பு குழுக்கள், 17 அமலாக்க குழுக்கள், ஒரு புலனாய்வுக் குழு மற்றும் ஒரு பறக்கும் படை என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 85,653 மின் திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை 10 ஆயிரத்து 586 மின் திருட்டுக்கள் கண்டறியப்பட்டு, 18.66 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

இதேபோல அமலாக்க குழுக்கள் மூலம் 4,616 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 32.90 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்