விரைவில் எல்லாம் ப்ரீபெய்டு மயம் - பணம் செலுத்தும் முறையை மாற்றும் தொழில்நுட்ப புரட்சி

செல்போன் போன்ற வெகு சிலவற்றில் மட்டுமே ப்ரீபெய்ட் என்ற சேவையை பார்த்து வந்த நாம்.. இனி வரும் காலங்களில் பெட்ரோல், டீசல், மின்சார கட்டணம் என அனைத்தையும் ப்ரிபெய்ட் முறையில் பயன்படுத்த போகிறோம். அது பற்றிய செய்தி தொகுப்பு...
விரைவில் எல்லாம் ப்ரீபெய்டு மயம் - பணம் செலுத்தும் முறையை மாற்றும் தொழில்நுட்ப புரட்சி
x
முன்பெல்லாம், டோல் கேட்டில், பணம் தான் கொடுக்கவேண்டி இருந்தது.. பின்னர் கார்ட் ஸ்வைப், RFID டேக் என்று மாறியது.. தற்போது புது கார் வாங்க போனால், அதில் RFID tag கண்டிப்பாக இருக்கும்... rfid tAG என்பது, உங்கள் காரில் ஒரு சிப் பொறுத்தப்படும், அதை ரீசார்ஜ் செய்து வைத்து கொண்டால், டோல் கேட்டில் நிற்கவேண்டிய அவசியம் இருக்காது.. சிப்பில் உள்ள பணம் தானாக எடுத்து கொள்ளப்படும்... இது தற்போது நடைமுறையில் உள்ளது...

 
அடுத்த கட்டமாக, மின்சாரத்திற்கும் ப்ரீபெய்ட் கட்டணம் வர உள்ளது... அதாவது, வீட்டில் உள்ள மின்சார பெட்டில் ஒரு சிப் பொருத்தப்படும். டிவி செட் அப் பாக்சில் உள்ளது போல ஒரு சிப் கொடுக்கப்படும்.  அதை ரீசார்ஜ் செய்து, சிப்பில் இருக்கும் பணத்திற்கு தகுந்த மாதிரி மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்... சிப்பில் பணம் இல்லாமல், மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மீண்டும் ரீசார்ஜ் செய்து மின்சாரம் பெறலாம் என்ற திட்டம் இன்னும் 3 ஆண்டில் வரும் என்கிறது மத்திய அரசு...

அதே போல், பெட்ரோல், டீசல் போடவும் இந்த சிப் தொழில்நுட்பம் வர உள்ளதாக தெரிகிறது.  காரில் பெட்ரோல் போடும் துளையின் அருகே, RFID Tag பொறுத்தப்படும்..  எவ்வளவு எரி பொருள் நிறப்பப்படுகிறதோ, அதற்கு தகுந்தாற் போல், அந்த சிப்பில் இருந்து பணம் எடுக்கப்படும்... இந்த தொழில்நுட்பம் வந்தால், பெட்ரோல், டீசல் போடுவதும் ப்ரீபெய்ட் தான்... பெட்ரோல் பங்க்கில் பில், கார்ட் ஸ்வைப் போன்றவற்றிக்கு இனி வேலை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஒரு சில பங்க்குகளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோலை கொடுத்துவிட்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான காசை வாங்க முடியாது..  800 மில்லி லிட்டர் பெட்ரோல், காரில் போடப்பட்டால், 800 மில்லி லிட்டருக்கு மட்டுமே பணம் எடுக்கப்படும்.... 

Next Story

மேலும் செய்திகள்