அணைகளில் உள்ள நீரின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

அணைகளில் உள்ள நீரின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? அங்குள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு உண்டா..?
அணைகளில் உள்ள நீரின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
x
அணைகளில் உள்ள நீரின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? அங்குள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு உண்டா..?

குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ஆம் மேட்டூர் அணை திறக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு நீரைத் திறக்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. அதற்கு அரசு சொன்ன காரணம்.. போதிய நீர் இல்லை என்பது தான்..   குறைந்த பட்சம் 80 அடி உயரம் இருந்தால் தான் நீர் திறக்க முடியும்.. ஆனால் தற்போது மேட்டூரில் சுமார் 40 அடிக்கு மட்டுமே நீர் மட்டம் உள்ளது. 40 அடி உயரத்திற்கு நீர் மட்டம் இருந்தாலும் அணை குட்டை போலத்தான் காட்சி அளிக்கிறது. 

அணையில் உள்ள நீரின் அளவை அறிவதற்காக அங்கு ஒரு மீட்டர் பொறுத்தப்படும்.. அதை வைத்து நீர் மட்டம் கணக்கிடப்படுகிறது..

உண்மையில், அணைகளில் உள்ள மீட்டருக்கும், அணையின் மொத்த கொள்ளளவிற்கும் தொடர்பு உண்டா என்று கேட்டால், இரண்டிற்கும் நேரடித் தொடர்பில்லை என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியை எட்டும் போது, அணையில் 65 டி.எம்.சி நீர் இருக்கும்.. அப்போது, குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். அது சுமார் 3 மாதத்திற்கு கடைமடை வரை பாயும். ஆனால் தற்போதுள்ள நீரை திறந்தால் 10 நாட்களுக்கு கூட போதாது என பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இன்று வரை தூர்வாரப்படாததால், அணையின் கொள்ளளவில் சுமார் 25 சதவீதத்திற்கு வண்டல் மண் படிந்துள்ளது. இதனால், நீர் மட்டத்திற்கு ஏற்ப, நீர் இருப்பதில்லை..  சுமார் 5 அடி உயரத்திற்கு படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ளினால், சுமார் 20 டிஎம்சி அளவிலான கூடுதல் நீரை சேமிக்கலாம் என்பதே பொறியாளர்களின் கருத்தாக உள்ளது,.

Next Story

மேலும் செய்திகள்