மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததால் 6 லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததால் 6 லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு
x
தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 6 லட்சம் விவசாய நிலங்கள் காவிரி நீரை நம்பி உள்ளன. இந்த ஆண்டு போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதியான இன்று, தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
இதனால் விவசாய நிலங்கள் சொட்டு நீர் கூட இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் நிலத்தடி நீர் மூலம் குறுவை சாகுபடியை மேற்கொள்ள தமிழக அரசு 105 கோடி ரூபாய்க்கு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் பலன் விவசாயிகள் பலருக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சாகுபடி பாதித்துள்ளதால், பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகையை அரசே செலுத்த வேண்டும் எனவும், காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்