22 ஆண்டுகளுக்கு பிறகு உறவினர்களுடன் சேர்க்கப்பட்ட மனநலம் பாதித்த இளைஞர்

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் தனது உறவினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
22 ஆண்டுகளுக்கு பிறகு உறவினர்களுடன் சேர்க்கப்பட்ட மனநலம் பாதித்த இளைஞர்
x
உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மங்கல் என்ற மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் சிறு வயதிலேயே  இறந்து விட்டதால்,  அவரை ஆதரிக்க ஆள் இன்றி விட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  

சில காலங்களாக அப்பகுதியின் சாலை ஓரங்களில் அலைந்து திரிந்த அவர் ரயில் மூலம் சென்னை வந்துள்ளார். 

 
இந்நிலையில்  சென்னை போலீசார் அவரை அழைத்து சென்று மாங்காடு அருகே கொளப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். 

மங்கல் வீட்டை விட்டு வெளியே வந்து 22 வருடங்கள் ஆன நிலையில் பூந்தமல்லி காவல் ஆய்வாளர் தாஹிரா என்பவர் இவருக்கு உதவியுள்ளார். 

காவல் ஆய்வாளர் தாஹிரா காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களது உறவினர்களுடன் சேர்த்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை சேவை நோக்கில் அவர் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

தாஹிரா கொளப்பாக்கம்காப்பகத்திற்கு வந்து மங்கலிடம் பேச்சு கொடுத்த போது அவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பதையும் கண்டறிந்தார். 

இதனை அடுத்து  இவரை பற்றிய தகலை சேகரித்த தாஹிரா அவரது உறவினரை தொடர்பு கொண்டு மங்கலை உறவினர்களுடன் சேர்த்துள்ளார். 

22 வருடங்களுக்கு பின் மங்கலை அவரது உறவினர்களுடன் சேர்த்தது அவரது உறவினர்களுக்கு மட்டுமல்லாமல் தமக்கும் மகிழ்ச்சியாக இருப்பதாக தாஹிரா தெரிவித்துள்ளார். 

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை காவல் ஆய்வாளர் 22 வருடங்களுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவலர் ஆய்வாளர் தாஹிராவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்