சுத்தமான குடிநீரை கண்டுபிடிப்பது எப்படி?

குடிப்பதற்காக வாங்கும் கேன் வாட்டர்கள் முறையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தானா என்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?
சுத்தமான குடிநீரை கண்டுபிடிப்பது எப்படி?
x
நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் என்ற பெயரில் கேன் வாட்டர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிலர் வீடுகளில்  தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகின்றனர்.கோடை காலம் தீவிரமடைந்து, தேவை அதிகரித்துள்ளதால் தண்ணீர் சுத்தப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி கொண்டு கேன்களில் சரியாக சுத்திகரிக்கப்படாத  தண்ணீர் விற்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.  இதுபோன்ற சூழ்நிலையில் தண்ணீரினால் ஏற்படும் பாதிப்பை போக்க அதை நன்கு காய்ச்சி பருக வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதன் மூலம் தண்ணீரினால் பரவும்  நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பது அவர்க​ளின் அறிவுரை. விற்பனைக்கு வரும் குடிநீர் முறையாக சுத்திகரிப்பட்ட தண்ணீர்தான் என்பதை அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தண்ணீர் நிறுவனங்களை  அவ்வப்போது ஆய்வு செய்து போலிகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். இந்த விஷயத்தில் அரசு மட்டுமல்லாமல்  பொது மக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் போலி குடிநீரை தடுக்க  முடியும். 


Next Story

மேலும் செய்திகள்